குலுக்கல் முறையில் பரிசு.. கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த கும்பல் - சிக்கிய மொபைல் கடை உரிமையாளர்

x

பணத்திற்கு ஆசைப்பட்டு, மோசடி கும்பலுக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டுகளை விற்பனை செய்த, கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியிடம், சோப்பு விற்பனை செய்த மர்மநபர்கள், குலுக்கல் முறையில் பரிசு தருவதாகக் கூறி, பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை பெற்றுச் சென்றுள்ளனர்.

சோனி டிவி மற்றும் ஸ்கூட்டி பைக் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்காக வரி கட்ட வேண்டும் எனக் கூறி, கூலித்தொழிலாளியிடம், 36 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை மர்மநபர்கள் வசூலித்துள்ளனர்.

பரிசு தராமல் இழுத்தடித்து வந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கூலித்தொழிலாளி, இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில், மோசடியில் ஈடுபட்ட காளீஸ்வரன், இசக்கிமுத்து, அய்யனார் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த மோசடி சம்பவத்தில் பயன்படுத்துவதற்காக, போலியான பெயரில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியதும் அதற்காக, கடையநல்லூரை சேர்ந்த சிம்கார்டு விற்பனை கடை நடத்தி வரும் தங்கராஜ் என்பவரிடம், சிம்கார்டுகளை பெற்றதும் தெரியவந்தது.

பின்னர் தங்கராஜை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்