தமிழக மாணவர்களை இரும்புக் கட்டையால் விரட்டி விரட்டி அடித்த சுங்கச் சாவடி ஊழியர்கள் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி

x

தமிழக மாணவர்களை இரும்புக் கட்டையால் விரட்டி விரட்டி அடித்த சுங்கச் சாவடி ஊழியர்கள் - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி

ஆந்திர மாநில சுங்கச் சாவடியில், தமிழக மாணவர்களை சுங்கச் சாவடி ஊழியர்கள் விரட்டிச் சென்று இரும்புக் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இவர்கள் சட்டக் கல்லூரி எழுதி விட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். புத்தூர் அருகே உள்ள வடமாலாபேட்டை சுங்கச்சாவடியில் பாஸ்டேக் சரியாக செயல்படாததால் கட்டணம் செலுத்துவதில் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள், ஆந்திரவுக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேட்டு, அவர்களை சுங்கச் சாவடி ஊழியர்கள் தாக்கத் தொடங்கினர். அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டுள்ளனர். போலீசார் முன்னிலையில் ஆண்கள், பெண்கள் என்று பாராமல், சுங்கச் சாவடி ஊழியர்கள் இரும்புக் கட்டையால் தாக்கியதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். போலீசாரும், அங்கிருந்த பொதுமக்களும் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்