காருக்குள் கட்டுக்கட்டாய் கரன்சி..! - "ரூ.2000 நோட்டுகளை மாற்ற கமிஷன்..?" மடக்கிப்பிடித்த போலீசார்

x

கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், காரின் பின்னால் இருந்த, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 100 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டன. உரிய ஆவணங்கள் இல்லாததால், அதுகுறித்து கார் ஓட்டுநர் வீரபத்திரையா மற்றும் விக்ரம்சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், கமிஷன் அடிப்படையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்