என்ன ஒண்ணுமே தெரியல.. கடலூரில் கொட்டும் பனி - கழுகு பார்வை காட்சி

x

குளிர் பிரதேசம் போல் காணப்பட்ட கடலூர்; எதிரே வரும் வாகனங்களை மறைத்த மூடு பனி.

கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.

மார்கழி மாதம் பனிப்பொழிவு துவங்கும் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே பனிப்பொழிவு துவங்கியது.

கடலூர் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கிய முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வந்தது.

இன்று காலை கடலூரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.

கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கெடிலம் ஆற்றை, பார்த்த போது, ஆறு தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டமாக இருந்தது.

இதேபோல் திருவந்திபுரம் பகுதியிலும் பாலத்தில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கெடிலம் ஆற்றினை புகை மண்டலம் போல் பனி சூழ்ந்து காணப்பட்டது

மேலும் பெரும்பாலான விளைநிலங்களையும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்தது, ரயில் தடங்களும் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு காட்சி அளித்தது.

காலை 8 மணிக்கு பிறகும் சூரியன் உதித்தாலும், அதன் கதிர்கள் தெரியாத அளவுக்கு உறை பனியாக இருந்ததை பார்க்க முடிந்தது.

பனிப்பொழிவு காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பனி மூட்டமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்