மகனை தொடர்ந்து அப்பா...! அடுத்ததடுத்த கொலைகளால் அதிர்ந்த கடலூர் - அதிர வைத்த வாக்குமூலம்

x

மகனை தொடர்ந்து அப்பா...! அடுத்ததடுத்த கொலைகளால் அதிர்ந்த கடலூர் - அதிர வைத்த வாக்குமூலம்


கடலூர் மாவட்டம் நெய்வேலி 21-வது வட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி வீரமணியின் மகனை, அதேபகுதியை சேர்ந்த மகேஷ் குமாரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீரமணி, தனது மகனின் கொலையில் தொடர்புடைய ஜெயக்குமார் என்பவரின் வீட்டில் வெடிகுண்டு வீசியதுடன், அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ஜெயக்குமார் உயிர்தப்பிய நிலையில், இதுதொடர்பான வழக்கில், வீரமணி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தண்டனை காலம் முடிந்த வெளியே வந்த வீரமணி வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மகேஷ் குமாரையும், அவரது நண்பர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீரமணி தங்களை கொல்ல செய்ய திட்டம் தீட்டி வந்ததால், அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்