போதையால் சீறி பாய்ந்த லாரி - 3 உயிர்களை பலி வாங்கிய சோகம்
விருத்தாசலம் அருகே மது போதையில் லாரி ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில், சிறுவன் உட்பட மூன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் கோமங்கலத்தில், டேங்கர் லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தொரவலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவரின் மகள் ஓவியா, அவரது உறவினரான குமாரசாமி மற்றும் அவரது பேரன் தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்த போது, அதன் ஓட்டுனர் மணிகண்டன் போதையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story