ஜேசிபி மூலம் நொறுக்கப்பட்ட வீடுகள்

x

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே பாலாற்று கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. பாலாற்றங்கரையை ஒட்டி நீர்பிடிப்பில் உள்ள சாதிக் பாஷா நகர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள 347 வீடுகளை ஜேசிபி மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 90 விழுக்காடு வீடுகள் மொத்தமாக இடித்து அகற்றப்பட்டுள்ளன. இந்த பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்