கழுத்தை நெறித்த வட்டி கொடுமை.. முதியவர் எடுத்த விபரீத முடிவு - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் நம்பித்தலைவன் பட்டினத்தை சேர்ந்த முதியவர் ஆறுமுகம், அதே பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கிய நிலையில், மலையப்பனிடம் வாரம் 2 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தியதாகவும் சில மாதங்களாக வட்டி கட்ட தவறியதால், ஆத்திரமடைந்த மலையப்பன், முதியவர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், மனைவி மற்றும் மகனுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முதியவர் ஆறுமுகம், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com