தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம் - சாலை இறங்கி மாணவர்கள் செய்த செயல் - குவியும் பாராட்டுகள்

x

தீபாவளியை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் பகுதியில், துணிகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தி.நகர் சுற்றுவட்டார பகுதிகளான நார்த் உஸ்மான் ரோடு, சவுத் உஸ்மான் ரோடு, பாண்டி பஜார் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, ஒலிபெருக்கிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தி.நகர் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து, சாலைகளில் நடந்து செல்லும் மக்களை ஒழுங்குபடுத்தினர். பள்ளி மாணவ மாணவிகளின் இந்த செயலை கண்டு ஆச்சரியமடைந்த பொதுமக்கள், அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்