பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

x

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..


பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 2021 - 22ம் ஆண்டு, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட, குளிர் பருவ பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, சுமார் இரண்டு லட்சத்து இரண்டு ஆயிரம் விவசாயிகளுக்கு 284 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல, 2022 - 23ம் ஆண்டிற்கு விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ், சுமார் 19 ஆயிரத்து 282 விவசாயிகளுக்கு, 34 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 2 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு, 318 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இதனிடையே, இப்பணியினை தலைமைச் செயலகத்தில் இருந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்