செல்போன் செயலி மூலம் பயிர் கணக்கெடுப்பு - தமிழக அரசு எடுத்த முடிவு

x

செல்போன் செயலியை பயன்படுத்தி சோதனை அடிப்படையில் பயிர் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் எழுதியுள்ளார். அதில் செல்போன் செயலியை பயன்படுத்தி சோதனை அடிப்படையில் பயிர் கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் பெறப்புடும் தகவல்கள், அடங்கல் தகவல் தொகுப்புக்கு பயன்படுத்தப்படும் எனவும் இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ந் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பயிர் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள முதல்கட்டமாக 110 கிராமங்களில் செல்போன் செயலியை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் முதன்மை பயிற்சியாளர்களுக்கு வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்