இளம்பெண்களை துண்டு துண்டாக வெட்டி ரயில் நிலையங்களில் வீசும் பயங்கரம் - பின்னணியில் சீரியல் கில்லரா?.. பதறும் போலீஸ்

x
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளம் பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு உடல்கள் பிளாஸ்டிக் கவரில் ரயில் நிலையம் அருகே வீசப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பெங்களூரு யஸ்வந்தபுரா ரயில் நிலையம் அருகே, கடந்தாண்டு ஜனவரி மாதம் இளம் பெண் ஒருவரின் உடலை மர்மகும்பல் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதனை தொடர்ந்து, பையப்பனஹள்ளி ரயில் நிலையம் அருகே வந்த தூர்நாற்றத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலத்தை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
  • இந்த இரு சம்பவத்திலும் மர்மநபர்கள் ரயில் நிலையம் வந்து உடல்களை வீசிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • இதனிடையே, தொடர்ந்து இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு ரயில் நிலையம் அருகே உடல்கள் பிளாஸ்டிக் கவரில் வீசப்பட்டு வரும் சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்