ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - வெற்றி பாதையில் இந்தியா

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை எடுத்த‌து.

ரோகித் ஷர்மா 120 ரன்களை குவித்தார். ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் படேல் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் டோட் மார்பி 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் லியான் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்