பாகிஸ்தான் ரசிகரை பங்கமாய் கலாய்த்த சுந்தர் பிச்சை - இணையத்தில் வைரல்

x

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சுந்தர் பிச்சை, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியின் கடைசி மூன்று ஓவர்களை மீண்டும் பார்த்தவாறு தீபாவளியைக் கொண்டாடியதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், முதல் மூன்று ஓவர்களை சுந்தர் பிச்சை பார்க்க வேண்டும் எனப் பதிவிட்டார்.

இந்திய அணி முதல் மூன்று ஓவர்களில் தடுமாறியதை பாகிஸ்தான் ரசிகர் சுட்டிக்காட்டிய நிலையில், பாகிஸ்தான் தடுமாறியதையும் குறிப்பிடும் விதமாக, புவனேஸ்வர் மற்றும் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் மூன்று ஓவரா எனப் பதிவிட்டு சுந்தர் பிச்சை பதிலடி கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்