தேவதையே வா..வா..தந்தையானார் கிரிக்கெட் ஜாம்பவான்...!

x

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜேக் காலிஸூக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. 47 வயதாகும் காலிஸ், தனக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். தனது மனைவி சார்லீன் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள காலிஸ், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் குழந்தைக்கு சோல் கிரேஸ் காலிஸ் என பெயர் சூட்டி இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தந்தையாகியுள்ள காலிஸ்க்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்