கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்க்கை வரலாறு படம் - விஜய் சேதுபதிக்கு பதில் இவர் தான் ஹீரோவா...

x

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 800 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஸ்ரீபதி இயக்கத்தில், 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ், மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக இதில் நடித்துள்ளார். முத்தையா முரளிதரனின் பிறந்தநாளில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருந்ததும், எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர் விலகியதும், நினைவுகூரத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்