ஆட்டத்துக்கு தயாரான இந்தியா - நியூசி... ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்

x

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. வெலிங்டனில் நண்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால், வெலிங்டன் நகரில் இடைவிடாது மழை பெய்ததால், டாஸ் கூட போடப்படாமல் போட்டி ரத்தானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை மறுதினம் மவுன்ட் மாங்கனுயி நகரில் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்