அடுத்தடுத்த பட்டாசு கடைகளுக்கு பரவிய தீ..! அலறியடித்து ஓடிய மக்கள் ... உடல் கருகி இருவர் பலி

x

ஆந்திராவில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விஜயவாடாவின் ஜிம்கானா மைதானத்தில் தீபாவளிக்காக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கடையில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியது. அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியதால் பயங்கரமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால், வெடிவிபத்து ஏற்பட்ட கடையில் இருந்த மக்களும் அலறி அடித்து மைதானத்தை நோக்கி ஓடினர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இருவர் உயிரிழந்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்