ஒரு வாரமாக ஆற்றின் நடுவில் தஞ்சமடைந்த மாடுகள்.. பசுக்களை காண படகில் ஓடோடி வந்த விவசாயிகள்

x

காட்டுமன்னார்கோயில் அருகே ஒரு வார காலமாக ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் தஞ்சம் அடைந்த பசுமாடுகளை பார்க்க, விவசாயிகள் படகில் பயணம் மேற்கொண்டனர். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கடந்த 4ஆம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மணல் திட்டில் சிக்கிக் கொண்டன. தகவலறிந்து வைக்கோல், புல் கட்டுகளுடன் படகில் சென்ற விவசாயிகள், மாடுகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆற்றில் தற்போது அளவு கடந்த தண்ணீர் செல்லும் நிலையில், தண்ணீர் குறைந்த பிறகு மாடுகளை பத்திரமாக மீட்க அரசு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்