கோவை கார் வெடிப்பு சம்பவம்...என்.ஐ.ஏக்கு உதவியாக தமிழக காவல்துறை குழு | Covai Blast | NIA | TNPolice

x

கோவை கார் வெடிப்பு சம்பவம்...என்.ஐ.ஏக்கு உதவியாக தமிழக காவல்துறை குழு

கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ விசாரணைக்கு உதவியாக, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 14 போலீசார் கொண்ட தமிழக காவல்துறை குழு உருவாக்கப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், என்.ஐ.ஏ விசாரணைக்கு உறுதுணையாக, கோவை மாநகர காவல் துறை சார்பில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 காவலர்கள் கொண்ட குழு வழங்கபட்டுள்ளது. இந்த குழுவினர், விசாரணை நிறைவடையும் வரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்