"ஐய்யோ...அம்மாடி...எப்படி விழுந்துச்சு" குற்றாலத்தில் அடித்து செல்லும் குழந்தை - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

x

பழைய குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது தடாகத்தில் விழுந்த குழந்தையை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

கடந்த மூன்று நாள்களாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, பழைய குற்றாலம் அருவியில் கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது நான்கு வயது குழந்தை எதிர்பாராத விதமாக தடாகத்தில் வழுக்கி விழுந்தது. உடனடியாக அங்கிருந்த சிலர் குழந்தையை மீட்டனர். இதில் குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. எனினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்