தாமதமாக வந்த Uber கார் - அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

x

2018ம் ஆண்டு பெண் வழக்கறிஞர் கவிதா ஷர்மா, மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை செல்வதற்காக உபர் நிறுவனத்தின் காரை முன் பதிவு செய்ததாகவும், பல்வேறு அழைப்புக்கு பிறகு 14 நிமிடங்கள் தாமதமான பிறகு உபர் கார் வந்ததாகவும் முறையிட்டுள்ளார். அதனால் சென்னை செல்லும் விமானத்தை தவறவிட்டதுடன், பயண கட்டணமாக உபர் நிறுவனத்துக்கு 703 ரூபாய் செலுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சேவையின் தாமத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும், பயணிக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் வழக்கு செலவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்