சீரியல் நடிகர் அர்ணவ்-க்கு கண்டிஷன் போட்ட நீதிமன்றம்

x

சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதோடு, தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக அவரது மனைவியும், நடிகையுமான திவ்யா போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் 2 வாரங்களுக்கு முன்னர் அர்ணவை போலீசார் கைது செய்த நிலையில், ஜாமீன் கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் அர்ணவ் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், இரண்டு வாரங்களுக்கு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்