குருவாயூர் கோயிலில் நடைபெறும் நீதிமன்ற விளக்கு விழா - கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

x

குருவாயூர் கோயிலில் நடைபெறும் நீதிமன்ற விளக்கு விழா - கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நீதிமன்ற விளக்கு என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருச்சூர் மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டாம் என கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. குருவாயூர் கோயிலில் ஆண்டுதோறும் நீதிமன்ற விளக்கு விழா நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், தனியாகவும் கூட்டாகவும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் மதத்தை போற்றும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது சரியில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்நிலையில், திருச்சூர் மாவட்ட நீதி துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்