மீண்டும் மிரளவிட்ட "Couple" டாய்லெட் - சர்ச்சையானதால் உடனே நடந்த மாற்றம்

x

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் அலுவலகத்தில் அருகருகே வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது தடுப்புகள் அமைத்து இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில், ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில், அங்கு ஒரே கழிவறையில் அருகருகே தடுப்பில்லாமல் இரண்டு வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கையாக, நடுவே தடுப்புகள் அமைத்து இரண்டு அறையாக பிரிக்கப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்