தம்பதியினரை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் நடத்திய கொடூரம் - திருவண்ணாமலையை அதிரவைத்த சம்பவம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கணவன் மனைவியை கயிற்றால் கட்டிப்போட்டு, கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 7 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.குப்பநத்தம் பகுதியை சேர்ந்த ராஜவேலு என்பவரின் வீட்டில், 3 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி நுழைந்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்