நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு - போலீசில் சிக்கிய முக்கிய குற்றவாளி

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பவர்களைப் பிடிக்கச் சென்ற போலீசார், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு - போலீசில் சிக்கிய முக்கிய குற்றவாளி
Published on

காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிவகாஞ்சி போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த பரிவட்டம் விக்கி என்பவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். போலீசார் விரட்டிப்பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழுந்ததில் விக்கிக்கு கை முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த போலீசார், அவருடன் கஞ்சா விற்பனை செய்து வந்த மணிகண்டன், வசந்தகுமார் ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com