MBBS, BDSக்கான கலந்தாய்வு.. இவை இல்லாவிட்டால் அனுமதி கிடையாது | MBBS | Counselling

x

எம்பிபிஎஸ் - பிடிஎஸ் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங் உள்ள நிலையில், 9 வகை சான்றிதழ்கள் இல்லாவிட்டால் அனுமதி கிடாயாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில், காலை 9.30 மணி, 11:30 மணி , 2:30 மணி என மூன்று சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் உள்ள 606 இடங்களுக்காக ஆயிரத்து 398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், நீட் தேர்வு நுழைவு அட்டை மற்றும் மதிப்பெண் அட்டை, பத்து, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், அரசுப் பள்ளியில் படித்த‌தற்கான முதன்மை கல்வி அலுவலர்களின் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடியிருப்பு, ஜாதி சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும். இந்த ஒன்பது சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று கொண்டுவராவிட்டால் அனுமதி கிடையாது என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்