"கிணத்தை காணுமுங்க.! இதோ கிடைச்சிருச்சு" - அதிரடி ஆய்வில் இறங்கிய தாம்பரம் மேயர்

x

சென்னை தாம்பரம் அருகே கிணற்றை காணவில்லை என கவுன்சிலர் ஒருவர் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலிருந்து, கிணற்றை காணவில்லை என, திமுக மாநகராட்சி உறுப்பினர் சேகர் புகார் அளித்தார். அதன் பேரில், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் நிறுவனத்தால் மதில் சுவர் கட்டப்பட்டு, கிணறு பாதுகாப்பாக இரும்பு தகடுகள் மூலம் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது..


Next Story

மேலும் செய்திகள்