50 ஆயிரம் ரூபாய் லஞ்சம்.. இதெல்லாம் நடந்த உண்மை.. கவுன்சிலரை அடிக்க முயன்ற நகர்மன்ற தலைவர்.. வெளியான பரபரப்பு காட்சிகள்

x
  • 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக, கூடலூர் நகராட்சி தலைவர், கவுன்சிலர் இடையே தகராறு ஏற்பட்டது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
  • வீடு கட்ட அனுமதி வழங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக, நகராட்சி தலைவர் பரிமளாவுக்கும், 7ஆவது வார்டு திமுக உறுப்பினர் சத்தியசீலனுக்கும் தகராறு ஏற்பட்டது.
  • இதனிடையே, இருவரையும் சமாதானப்படுத்த முயற்சியில், கூடலூர் திமுக நகர செயலாளர் இளஞ்செழியன் பாபு ஈடுபட்டார்.
  • அப்போது, கடும் கோபமடைந்த பரிமளா, சத்தியசீலனை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • முன்னதாக, நகராட்சி தலைவர் பரிமளா தான் லஞ்சம் வாங்க அறிவுறுத்தியதாக, மாமன்ற கூட்டத்தின் போது சத்தியசீலன் கூறியது வைரலானது.

Next Story

மேலும் செய்திகள்