"பூசாரிகள் பேரவை" - தனி ஒருவனாக மெகா வசூல் வேட்டை

x

சிவகங்கையில், பூசாரிகள் பேரவை என்கிற பெயரில் மெகா பணம் வசூலில் ஈடுபட்ட போலி ஆசாமி காவல்துறையிடம் பிடித்து ஒப்படைக்கப்பட்டார்.

சிவகங்கை தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் மாவட்ட மாநாடு என்ற அச்சிட்டு பூசாரிகளுக்கு கடிதம் வந்துள்ளது. அதை பார்த்த பூசாரிகள், சலுகைகள் கிடைக்கும் என நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். மாநாடு என்ற பெயரில் தனி ஆளாக அங்கு வந்த கிருஷ்ண பிரேமை சுவாமிகள் என்பவர், பூசாரிகளிடம் நீங்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக சேர்ந்தால்தான் சலுகைகள் கிடைக்கும் என்று கூறி, விண்ணப்ப ஜெராக்சை கொடுத்துள்ளார். அவற்றை பூர்த்தி செய்து பெற்றுக் கொண்டு, ஒவ்வொருவரிடமும் தலா 400 ரூபாய் வசூலித்துள்ளார். காலை 9 மணிக்கு கூடிய நிலையில், மதியம் வரை தண்ணீர் கூட கொடுக்காத‌தால், சந்தேகம் ஏற்பட்டு கேள்வி எழுப்பிய்யுள்ளனர். அவர் சரிவர பதிலளிக்காத‌தால், அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்