"மோடியை ஆஸி. பிரதமர் புகழ்ந்ததை ஜீரணிக்க முடியவில்லை" - அமைச்சர் அனுராக் தாக்கூர்

x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவை அவமதித்து வருவதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உலகின் பல்வேறு நாட்டின் பிரதமர்கள் மற்றும் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்திருப்பதாகவும், வெளிநாட்டு பயணங்களில் 50 கூட்டங்களில் கலந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி தான் Boss என ஆஸ்திரேலிய பிரதமர் புகழ்ந்ததை ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்