பல லட்சம் செலவு ஆனால்..தொட்டாலே கையோடு வரும் செங்கல்..உயிரோடு விளையாடும் அதிகாரிகள்..

x

சிவகங்கை பேருந்து நிலையத்துக்கான புதிய கட்டிடம், ஒரு கோடியே 95 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. பில்லர்கள் எழுப்பப்பட்டு செங்கல் கட்டுமானம் நடைபெறும் நிலையில், தரமில்லாமல் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிமெண்ட் கலவை தரமில்லாமலும், தொட்டாலே பெயர்ந்து விழும் நிலையில் செங்கல் கட்டுமானம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கட்டுமான பணியை மதுரை மண்டல அலுவலர் ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் கட்டிடம் கட்ட உத்தரவிட்ட நிலையில், கிராவல் மண்ணை வைத்து மூடி மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தை தரமில்லாமல் கட்டினால், பல உயிர்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்