மாஜிக்களின் ஊழல் புகார்?..செந்தில்பாலாஜி விவகாரம் - ஆளுநரிடம் அமித் ஷா சொன்னது என்ன?

x

செந்தில் பாலாஜி விவகாரத்தால் தமிழக அரசியல் பரபரப்பாக காணப்படும் சூழலில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

தமிழக அரசுக்கும் - ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான மோதல், செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சத்தை எட்டியது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யவே, அவர் இலாகா இல்லா அமைச்சராக அமைச்சரவையில் தொடர்வார் என்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்தார்.

இதற்கு பதிலடியாக செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசு அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு. மறுபுறம் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார் ஆளுநர் .... இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த சூழலில், சில மணி நேரங்களிலேயே அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவித்தார் ஆளுநர் ...

இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் கருத்தை அமித்ஷா கேட்கச் சொல்லியிருப்பதாக கூறி, செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை திரும்ப பெற்றார்.

இதற்கு முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என ஆளுநருக்கு பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்....

தேசிய அரசியலிலும் கவனம் பெற்றிருக்கும் இந்த விஷயத்தில், அடுத்தது என்ன...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லி விரைந்த ஆளுநர் ஆர்.என். ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தீவிரமாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தில் பாலாஜி விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...? சட்ட நடைமுறைகள் என்ன...? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே போல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றங்களுக்கு விசாரணையை அனுமதிக்க வைத்த கோரிக்கைகள் ஆளுநர் கிடப்பில் போட்டியிருப்பதாக அரசு குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

டெல்லியில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலையும் சந்தித்து ஆளுநர் ஆலோசனையை பெறுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்