கூடைப்பந்தில் கரெக்டா கோல்..!சைக்கிளிங்.. பேட்மிண்டன்.. என எல்லாத்துலயும் அசத்திய முதலமைச்சர்

x

சென்னையில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, பொது மக்களை உற்சாகப்படுத்தினார்.

சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் குறிப்பிட்ட சாலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி இன்று காலை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கூடைப்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை உற்சாகமாக விளையாடினார். தொடர்ந்து சைக்கிளிங்கில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்களுடன் இணைந்து நடந்து சென்றார். அப்போது, ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சிறுவர்களும், அப்பகுதி மக்களும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்