மக்களே உஷாரா இருங்க..! ஆட்டம் காட்டும் கொரோனா.. தமிழகத்தில் எகிறும் எண்ணிக்கை

x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 250க்கும் மேற்பட்டோர் கொரேனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பரிசோதனைக்கு ஏற்ப நோய் பரவலின் விகிதம் தமிழக அளவில் 6 சதவீதமாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் தலா ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்