மீண்டும் அச்சத்தை உண்டாக்கும் கொரோனா...தடுப்பூசிக்காக படையெடுக்கும் மக்கள் | Corona Virus | Vaccine

x

கொரோனா பரவல் பற்றிய அச்சத்தின் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் அளவு, சமீப நாட்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 20 வரையில், நாடு முழுவதும், கொரொனா தடுப்பூசி போடுதல் அளவு, தினமும் சராசரியாக 42 ஆயிரத்து 591ஆக இருந்தது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பது பற்றிய மத்திய அரசு கடந்த வாரம் விடுத்த எச்சரிக்கைய தொடர்ந்து, தடுப்பூசி போடும் அளவு, இரு மடங்கு அதிகரித்து, 82 ஆயிரத்து 113ஆக உயர்ந்துள்ளது. பூஸ்டர் டோஸ்களின் தினசரி அளவு 25 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்து தற்போது 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசியின் தினசரி அளவு 12 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்து 16 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. 12 வயதிற்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில், மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் விகிதம் தற்போது 27 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 200ஆக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்