உலகை மிரட்டும் கொரோனா... இந்தியாவின் நிலை என்ன..? - மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் 243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 185 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா குணமடைந்தவர்க எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 850ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 608 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை இந்தியாவில் 220 கோடியே 9 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com