"இந்தியாவுல கொரோனா இன்னும் ஓயல... ஒருத்தரையும் விடாதீங்க.. வாட்ச் பண்ணுங்க" - பறந்த அதிரடி உத்தரவு

x

சீனாவை ஆட்டிப்படைக்கும் ஒமிக்ரான் BF.7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 4 பேருக்கு பரவியுள்ளது.

சீனாவில் புதிய அலையாக ஆட்டிப் படைக்கும் உருமாறிய ஒமிக்ரான் BF.7 வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் தொற்றால் குஜராத்தில் 3 பேரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், உருமாறிய வைரசை கண்காணிக்க வேண்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே சீனாவில் தடுப்பூசி செலுத்தியும் போதிய எதிர்ப்பு சக்தி இல்லாததால், ஒமிக்ரான் BF.7 வைரஸ் வேகமாக பரவுகிறது என சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதே வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்