விசாரணை கைதிக்கு கொரோனா உறுதி - ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு பரிசோதனை

x

நெல்லையில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

நெல்லை தச்சநல்லூர் காந்தி சிலை அருகே கடந்த 7ம் தேதி பணம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி என்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தபட்டுள்ளார். இதனிடையே, சாந்தியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து சென்ற, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தை கிருமிநாசினி மூலம் தூய்மை படுத்தும் பணியை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்