வன்முறை கும்பல்களுக்கு இரையாகும் காவலர்கள்...போராட்டத்தில் குதித்த காவல்துறையினர்

x

வன்முறை கும்பல்களுக்கிடையேயான மோதலில் கடந்த வாரம் காவல் துறையினர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதி நாட்டு போலீசார் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரீபிய நாடான ஹைதியில் கடந்த 2021ம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த ஜோவெனல் மாய்சே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு ஏரியல் ஹென்றி அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து வன்முறைகளில் இதுவரை 78 போலீசார் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கூட தலைநகர் போர்ட் ஆ பிரின்ஸ் அருகே ஒரு வன்முறை கும்பல் 4 போலீசாரை கொலை செய்தது. கடந்த புதன் கிழமை கூட லியான்கோர்ட் நகரில் மற்றொரு வன்முறை கும்பலால் 7 போலீசார் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் என்று கூறப்படும் பல போராட்டக்காரர்கள் அதிபர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தி, சாலைகளை முடக்கி போராட்டம் செய்ததுடன், அடுத்த கட்டமாக அர்ஜெண்டினா பயணம் தொடர்பாக ஹென்றி விமான நிலையத்திற்கு வருவதை அறிந்து அங்கும் படையெடுத்தனர். தற்காலிகமாக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட ஹென்றி பிறகு ஒருவழியாக வீடு திரும்பினார். காவல்துறையினர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்