சக மாணவரோடு தகராறு.. வயிற்றில் விழுந்த கத்திக்குத்து - தலையில் அடித்து கதறிய தாய்

சக மாணவரோடு தகராறு.. வயிற்றில் விழுந்த கத்திக்குத்து - தலையில் அடித்து கதறிய தாய்
Published on

நீலகிரியில், பள்ளி மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில், பதினோராம் வகுப்பு பயின்று வரும் இரு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால், சக மாணவரை தாக்கியுள்ளார்.

இதில் முதுகு பகுதியில் படுகாயமடைந்த மாணவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கத்தியால் தாக்கிய மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com