பணம், பரிசு கொடுத்து அளித்து மதமாற்றம்.. - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

x

பணம், பரிசுப் பொருட்களை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும், பணம், பரிசுப் பொருட்களை அளித்து செய்யும் மதமாற்றம், அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரியும், பாஜகவைச் சேர்ந்த அஸ்வின் குமார் உபாத்தியாயா பொதுநல மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தஞ்சை லாவண்யா பேசியதாக வெளியான வீடியோவை சிபிஐ விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் இல்லை என்றும், மனுதாரரின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்