அர்ச்சகர் ஆடியோவால் வெடித்த சர்ச்சை

நவபாஷாண முருகன் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்த முயல்வதாக அர்ச்சகர் சங்கத் தலைவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... பழனி முருகன் கோயிலில் வரும் ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறங்காவலர் குழு சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்காக, நவபாஷாணம் முருகன் சிலையை பலப்படுத்தும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதி அரசர் பொங்கிளிப்பன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில், சாமி சிலை பலப்படுத்தப்படாத நிலையில், கும்பாபிஷேக பணிகள் தொடர்பாக கையெழுத்து போட சொன்னால், போடக் கூடாது என வலியுறுத்தி அர்ச்சகர் சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்கள் பேசிய ஆடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

X

Thanthi TV
www.thanthitv.com