மாநில உள்துறை அமைச்சர்களின் ஆலோசனை மாநாடு - பிரதமர் மோடி நாளை பங்கேற்பு

x

மாநில உள்துறை அமைச்சர்களின் ஆலோசனை மாநாடு - பிரதமர் மோடி நாளை பங்கேற்பு

உள்துறை செயலாளர்களின் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.அரியானாவில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களின் ஆலோசனை மாநாடு இன்று தொடங்குகிறது. அரியானா மாநிலம் சுராஜ்கண்டில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை மாநாடு நடைபெற உள்ளது. இதில், அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள், மத்திய காவல்படை, காவல் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ளார். அப்போது, காவல் படையை நவீனமயமாக்குதல், கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்