மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு - தொழில் நிறுவனங்கள் முன்வைத்த கருத்துகள்

x

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் சிறு, குறு தொழிற்சங்க உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அப்பொழுது, மின்கட்டண உயர்வால் நெசவு, அரிசி ஆலை, விசைத்தறி என சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், சாதாரண மக்களும் கடும் நெறிக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற பொதுமக்கள், மின்கட்டண உயர்வு என்ற பெயரில் தொழில் நிறுவனங்கள் நசுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், ஆண்டு தோறும் 6 சதவீத மின்கட்டண உயர்வு என்ற திட்டத்தை கொண்டு வந்தால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்றனர்.


Next Story

மேலும் செய்திகள்