உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் பலி..கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு

x

தியாகதுருகம் அருகே உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புகைப்பட்டியை சேர்ந்தவர்கள் நாகராஜன் மற்றும் கிருஷ்ணன். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளிகளான இவர்கள், வாழவந்தான் குப்பத்தில் மத்திய அரசின் தொகுப்பு வீட்டிற்கு தளம் போட்டுள்ளனர். அப்போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்