இந்திய அரசியலமைப்பு தினம் - சுங்கத்துறை அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவ சிலை திறந்து வைப்பு | Chennai

x

இந்திய அரசியலமைப்பு தினம் - சுங்கத்துறை அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவ சிலை திறந்து வைப்பு

சென்னை பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கொண்ட நாளை ஒட்டி அம்பேத்கரின் உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. நவம்பர் 26ஆம் தேதி, இந்தியா முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கொண்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, சுங்கத்துறை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவ சிலையை, சென்னை மண்டலத்தின் தலைமை சுங்க ஆணையர் ஸ்ரீ எம்.வி.எஸ். சௌத்ரி திறந்து வைத்தார். இதையடுத்து ஊழியர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்