காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் தகனம்...தலைவர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி

x

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார்.

இதையடுத்து திருமகன் ஈவெரா உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் திருமகன் ஈவேரா உடல் இன்று மதியம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திருமகன் ஈவேராவின் மகள் சமனா ஈவேரா அவரது உடலுக்கு எரியூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்