காங். எம்.பி.ஜெகதீஷ் டைட்லர்..அதிரடி காட்டிய சிபிஐ
பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி முழுவதும் கலவரம் ஏற்பட்டது. டெல்லி ஆசாத் மார்க்கெட் அருகே சர்தார் தாகுர் சிங், பாதல் சிங், குருசரண் சிங் மூன்று சீக்கியர்களை உயிருடன் 1984, நவம்பர் 11-ஆம் தேதி எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ கடந்த 2005, நவம்பர் 22-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. முன்னாள் எம்.பி ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதால் கலவர கும்பல் கடைகளுக்கு தீயிட்டு மூன்று சீக்கியர்களையும் உயிருடன் எரித்து கொல்ல காரணமாக அமைந்தது என, சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
Next Story
